தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Thiru. Justice T. Ravindran.

Hon’ble Mr. Justice P. Velmurugan.

தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்மந்தமாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க உத்தரவிட கோரி, 3 வழக்கறிஞர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை  இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார்.

இதைக் கேட்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் P.வேல்முருகன் மற்றும் T.ரவீந்திரன் ஆகியோர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதுவும் தெரியாமல் இங்கே உட்காந்திருக்கிறோம் என நினைக்க வேண்டாம், நாங்கள் இங்கே உட்கார்ந்திருப்பதால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம் என்றனர்.

மறு உத்தரவு வரும் வரை இறந்தவர்களின் உடற்கூறு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரதேச பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து உத்தரவு வழங்கப்படும்.

 இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply