அவசரம் காட்டும் ஆளுநர்! கர்நாடகாவில் திடீர் திருப்பம்!- எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு! காலை 9.30 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு.

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க, அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

காலை 9.30 மணிக்கு எடியூரப்பா தலைமையில் கர்நாடகா அமைச்சரவை பதவியேற்க உள்ளது. மேலும், 15 நாள்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி தேவுகவுடா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா ஆளுநருக்கு எதிராக போர்கொடி உயர்த்தவும், அவசியம் ஏற்பட்டால், நீதி மன்றத்தை அணுகவும் தயாராகி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பதட்ட நிலைமை உருவாகியுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

எடியூரப்பா பதவியேற்பும்! காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் குமாரசாமி தரப்பினரின் எதிர்ப்பும்! -கர்நாடகாவில் களைக்கட்டும் அரசியல் வியாபாரம்...!
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-க்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் ஆறுதல்!

Leave a Reply