சேதமடைந்த குழாய்கள்; மாசடைந்த குடிநீர்!- பொள்ளாச்சி மக்களின் புலம்பல்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, 36-வது வார்டு பொட்டுமேடு பகுதியில் கடந்த 3 மாதம் காலமாக, தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சரிவர சீரமைக்கப்படாததால், கடந்த 3 மாத காலமாக சரிவர குடிநீர் வரவில்லை. இந்நிலையில், தற்போது குடிநீர் குழாய்களில் சாக்கடை போல மாசடைந்த நீர் வருவதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-கி.தாமோதரன்.

 

திருச்சி, லால்குடி அருகில் சாலை போட்டதில் முறைகேடு!- கனரக வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
SC/ST சட்டத்தில் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, பாரத ஸ்டேட் வங்கியை முற்றுக்கையிட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது!

Leave a Reply