திருச்சியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் டி.டிவி தினகரன் அணியினர் இடையே மோதல்!


சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த வந்த அ.தி.மு.க. பா.ஜ.க மற்றும் டி.டிவி தினகரன் அணியினர் இடையே யார் முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது  என்பதில் போட்டி உருவானது. சிறிது நேரத்தில் வாய் தகறாறு ஏற்பட்டு தள்ளு, முள்ளு உருவானது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தலையிட்டு, அனைவரையும் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில், ஒருவருக்கொருவர் மரியாதை குறைவாக நடந்து கொண்ட இவர்களுக்கு, அம்பேத்கரின் ஆன்மாதான் நல்ல புத்திக் கொடுக்க வேண்டும்.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

ஏற்காட்டில் மலர்கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்!-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

One Response

  1. S kumar April 14, 2018 3:45 pm

Leave a Reply