இதழியல் மற்றும் திருத்தம் சான்றிதழ் வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா!- திருச்சி தேசியக் கல்லூரியில் நடைப்பெற்றது.

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத்துறை, தேசியக் கல்லூரி, பல்கலைக்கழக மாணியக் குழு மற்றும் தினமலர் உடன் இணைந்து வழங்கும் இதழியல் மற்றும் திருத்தம் சான்றிதழ் வகுப்பிற்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.

ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ரா. இளவரசு  வரவேற்ப்புரை ஆற்றினார்.

தி இந்து நாளிதழின் முன்னாள் சிறப்பு  செய்தியாளர் வி. கணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற 17 மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கினார்.  இதில் 9 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் அடங்குவர். இதில் அ.பூர்ணிமா இளநிலை கணிதவியல் மாணவி முதலிடம் பெற்றார்.

வி.கணபதி தன்னுடைய சிறப்புரையில், தேச தந்தை காந்தி தன் வீட்டின் கதவு மற்றும் சன்னல்களை திறந்தே வைக்க விருப்பினார், இதன் வழியாக உலகின் அனைத்து கலாச்சாரமும் அவரின் வீட்டை அடையும் என்றார். அது போல், மாணவர்கள் தங்களுடைய புலன்கலை திறந்துவைத்து காத்திருக்க வேண்டும். அதன் வாயிலாக பல்வேறு முகம்கொண்ட மனிதர்களாக மாணவர்கள் விளங்க முடியும். அவரின் இளமை காலத்தில் இதழியல் போன்ற படிப்புகள் இல்லை. ஆனால், தற்பொழுது இதுபோன்ற பல சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் மாணவர்கள் பங்கு பெற்று தன்னை ஒரு பண்முகம் கொண்டவர்களாக மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மேலும், இந்த செய்தி மற்றும் தொடர்பியல் வளர்ந்த இந்த காலகட்டத்தில், பத்திரிகை துறைதான் மற்ற சமுக வலைதளங்களை விட நம்பகமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. மேலும், பத்திரிகை துறையில் விருப்பமுள்ளவர்கள் தன்னுடன் இணைந்து வேலை பார்க்க அழைப்பு விடுத்தார்.

விழாவில் வாழ்த்திப் பேசிய தினமலர் தலைமை செய்தியாளர் க.சந்திரசேகர் இன்று பத்திரிக்கை துறைதான் மற்ற ஊடகத்துறைகளைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்றும், மாணவ, மாணவிகள் எழுதி அனுப்பம் சிறப்பான செய்திகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், தினமலரின் எடிட்டர்  வாழ்துச் செய்தியினை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூறினார்.

இவ்விழாவில் தலைமையுரையாற்றிய கல்லூரியின் முதல்வர் முனைவர். ரா.சுந்தரராமன், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, சிறப்பு விருந்தினரின் அறிவுரை படி நடக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். 

இந்த வகுப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான. வே. ஸ்ரீராமச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.

– ஆர்.மார்ஷல்.

 

 

 

Leave a Reply