காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

’’காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. ஒழுங்காற்று குழுவோ அல்லது காவிரி மேலாண்மை வாரியமோ அமைக்காமல் மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. புதுச்சேரி வந்த பிரதமரை நானும், அமைச்சர்களும் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வலியுறுத்தினோம்.

மேலும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஏக மனதாக முடிவை எடுத்தோம். பிரதமருக்கு மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடிதம் எழுதினேன். இல்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக்கூறியும், பிரதமரிடமிருந்து பதில் இல்லை. சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். 

புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்மானத்தை காங்கிரஸ் திமுக அதிமுக ஒன்றாக இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால், அப்போது கூட என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.   சட்ட ரீதியான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்கும். எவ்வகையிலும் இதில் புதுச்சேரி அரசு பின்வாங்காது. தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன். அரசியல் கட்சிகளுடன் இணைந்து பேசி போராட்டம் அறிவிப்போம். இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அனுப்பிய கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. k.venkataraman April 1, 2018 10:04 pm

Leave a Reply to k.venkataraman Cancel reply