உஷா உயிரிழந்த சம்பவம்!-இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி! -நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று, திருச்சி, திருவெறும்பூர். கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த வழக்கில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு 14.03.2018 அன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 16.03.2018 -க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இம்மனு, திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.லோகேஷ்வரன் முன்பு (16.03.2018) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை  மதியம் 1 மணிக்கு ஒத்தி வைத்தார்.

அதன் பிறகு நடைப்பெற்ற விசாரணையில்,  “இந்த சமூகம் நீதிதுறை அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் காவல் துறையைச் சேர்ந்தவர்; இந்த வழக்கு மிகவும் தீவிரமான விசாரணை நிலையில் உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, இந்த நபருக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஆகையால், முடிவாக இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” இவ்வாறு நீதிபதி எல்.லோகேஷ்வரன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

காமராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட  நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply