கலையை மொழிப்படுத்தினால் அது கவிதை; அதை விழிப்படுத்தினால் அது தூரிகை!- பிரைம் நெஸ்ட் கட்டிடக்கலை கல்லூரி மாணவர்களின் சமுதாய விழிப்புணர்வு சேவைகள்…!

ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், ஐயாயிரம் முறை படித்தாலும், மனதிற்குள் பதியாத பல கருத்துக்களை, சில கிறுக்கலான கோடுகள், பசுமரத்தில் அடித்த ஆணியைப் போல நம் மனதில் பதிய வைத்து விடுகிறது…! அந்த வலிமையும், வசீகரமும் தூரிகைக்கு மட்டும்தான் உண்டு.

கலையை மொழிப்படுத்தினால் அது கவிதை; அதை விழிப்படுத்தினால் அது ஓவியம்; ஓவியம் என்பது கலையின் மெளனம்; அது ஆழ்கடலின் அமைதி; அது கண்ணுக்கு விருந்தாகும், இச்சமுதாயத்திற்கு அருமருந்தாகும்.

ஆம், அந்த வகையில் திருச்சி, சிறுகனூரில் உள்ள  பிரைம் நெஸ்ட் கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட மேலபுதூர் சுரங்கப் பாதையில் உள்ள இருபுறமும் உள்ள சுவர்களில் இருந்த சுவரொட்டிகளையெல்லாம் சுத்தப்படுத்திவிட்டு, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியோடு, சில தனியார் வியாபார நிறுவனங்களின் உதவியுடன், பல சமுதாய விழிப்புணர்வு ஓவியங்களை, 40 நபர்கள் கொண்ட மாணவ, மாணவிகள் குழு, சுழற்சி முறையில் கடந்த ஒரு மாதக் காலமாக தங்கள் எண்ணங்களை, வண்ணங்களாக்கி பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

அவர்களை இன்று நமது “உள்ளாட்சித்தகவல்” செய்தியாளர்கள் நேரில் சந்தித்து, அவர்களது உணர்வுகளை பதிவு செய்துள்ளார்கள்.

சந்திப்பு:-ஆர்.சிராசுதீன்,  ச.ராஜா.

Leave a Reply