கருணைக்கு முதுமை தடையில்லை!- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் போர்கால நடவடிக்கை!

குரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் செய்தி தெரிவித்ததோடு, தன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல், தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் போர்கால அடிப்படையில் இன்று மதுரை வந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கையில் எந்த போலித்தனமும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் கூறிய விதம் உண்மையிலுமே மெய்சிலிர்க்க வைத்ததுகருணைக்கு முதுமையும், மொழியும் தடையில்லை என்பதை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிரூபித்துள்ளார்.

துக்கத்திலும், துயரத்திலும், கஷ்டத்திலும், கண்ணீரிலும், தத்தளித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு முதலில் தேவையானது ஆறுதல். அதுவும் முன், பின் யார் என்றே தெரியாதவர்களுக்கு உதவிசெய்வதுதான் உண்மையான மனித நேயம்.

-ஆர்.மார்ஷல்.

திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி ஆலய கமலாலயக் குளத்தில் பயன்படுத்தபடாதப் படகுகள்!
இருப்போர் கொடுக்கலாம்…! இல்லாதோர் எடுக்கலாம்…!- அன்பு சுவரின் அசத்தல் திட்டம்!

Leave a Reply