கடவாச்சேரி பாலத்தில் உப்பு லாரி மோதி விபத்து! -நாகை – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!

சிதம்பரத்தை அடுத்த புறவழிச்சாலை கடவாச்சேரி      பாலத்தில் உப்பு லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானதில், நாகபட்டினம்– பாண்டிச்சேரி (NH-32) தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    

இதனால் தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் செய்வதறியாது நடுவழியில் தவித்தனர். இன்று மாலை வரை போக்குவரத்து சரிசெய்யபடவில்லை. இதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த பாலம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால், புதிதாக பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் பொதுப்பணித்துறையோ (அல்லது) தேசிய நெடுஞ்சாலைத்துறையோ இதுவரை எடுக்கவில்லை. இன்னொரு விபத்தைத் தாங்கும் சக்தி இந்த பாலத்திற்கு இல்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், இந்த பாலத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இப்பாலத்தை நேரில் பார்வையிட்டு, புதிய பாலம் அமைக்கும் வரை முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். 

-க.மகேஷ்வரன்.

Leave a Reply