பேருந்து நிழற்குடை இல்லாமல் அவதிப்படும் மாம்பாக்கம் மக்கள்!

வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், மாம்பாக்கம் ஊராட்சியில், மாம்பாக்கம் முதல் ஆற்காடு வரை மற்றும் வாழைப்பந்தல் முதல் மாம்பாக்கம் வழியாக தலங்கை வரை செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் ஆரணி முதல் மாம்பாக்கம் வழியாக செய்யாறு, காஞ்சிபுரம் வரை, பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், பயணிகளுக்கு தேவையான பேருந்து நிழற்குடை இல்லாததால்,  மக்கள் சாலையிலும் மற்றும் சாலையின் அருகே உள்ள கடைகளிலும், நிற்க வேண்டி உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் நனைந்துக் கொண்டே நிற்கவேண்டியிருக்கிறது.

எனவே, அந்த இடத்தில்  பேருந்து நிழற்குடை அமைத்துக் கொடுத்தால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-மு.ராமராஜ்.

-ச.ரஜினிகாந்த்.  

 

சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆய்வாளர்கள் இடமாற்றம்! - உத்தரவின் உண்மை நகல்.
“நாரி சக்தி புரஸ்கார் விருது”  பெற்ற பெண்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

Leave a Reply