திரௌபதையம்மாள் கோவில் திருவிழா! – குடவாசலில் கோலாக்கலக் கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல், சுண்ணாம்பு பாளையம், சேட்டு மேட்டுத் தெருவில் அமைந்துள்ள தர்மராஜா என்னும் ஸ்ரீ கிருஷ்ணார்சுன சமேத ஸ்ரீ திரௌபதையம்மாள் கோவிலில் அம்மன் வீதியுலா, இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக  இன்று  நடைப்பெற்றது.

கடந்த 19-ம் தேதி காலை 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு தர்மராஜா பிறப்பு நிகழ்ச்சியும், 20-ம் தேதி கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும், 21-ம் தேதி அம்மன் பிறப்பு நிகழ்ச்சியும், 22-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி வஸ்திராபரணமும், 24-ம் தேதி அரவான் கடபலியும், 25-ம் தேதி தபசும், 26-ம் தேதி காலை 9 மணிக்கு துரியோதணன் யுத்தமும், திரௌதியம்மாள் கூந்தல் முடித்தலும், அன்று  மாலை 7 மணிக்கு தீமிதி எனும் அக்னி வசந்தம் நிகழ்ச்சியும், இன்று (27 ம் தேதி) மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 28-ம் தேதி தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழா என்பதால்,  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

-க.குமரன்.

Leave a Reply