பாரதிதாசன் பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா!- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மணிசங்கர் தலைமையில் இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இஸ்ரோ தலைவர் சிவன், உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற 616 மாணவர்கள், 630 மாணவிகள் என 1,246 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழக பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் அந்தந்த கல்லூரி மூலம் வழங்கப்படும்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருச்சி வருகை!- படங்கள்.
திருச்சிக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-க்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி!

Leave a Reply