தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் எஸ்.மலர்விழி தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (சுகாதாரம்) எம்.விஜயலட்சுமி, அரியலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். மீன்வள இயக்குனர் வி.பி.தண்டபாணி, கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிக வரிகள் இணை கமிஷனர் (அமலாக்கம்) மரியம் பல்லவி பால்தேவ், தேனி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி இயக்குனர் டி.அன்பழகன், கரூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமி பிரியா, வணிக வரிகள் இணை கமிஷனராக (அமலாக்கம்) மாற்றப்பட்டுள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் என்.வெங்கடாச்சலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

கரூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் டி.விவேகானந்தன், மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் கமிஷனரும், தொழில்நுட்பக்கல்வி இயக்குனருமான (பொறுப்பு) ஆர்.பழனிசாமி, தொழில்நுட்பக் கல்வி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்புச் செயலாளர் சி.சமயமூர்த்தி, போக்குவரத்து கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்புச் செயலாளராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் என்.சுப்பையன், தோட்டக்கலை மற்றும் பயிரீட்டு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். கவர்னரின் முன்னாள் துணைச் செயலாளர் டி.மோகன், பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

மேட்டூர் சப்கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி, நில நிர்வாக இணைக் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.சீனிவாசன், சிப்காட் மேலாண்மை இயக்குனரானார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஞ்சன்சிங் ஆர்.சவான், தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். நில நிர்வாக இணைக் கமிஷனர் பி.மதுசூதன் ரெட்டி சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

ஏற்காடு மலைப்பாதை வனத்து அந்தோணியார் ஆலயத்தில் சிலைகள் உடைப்பு மற்றும் திருட்டு!
தஷ்வந்த் என்ற மனித மிருகத்திற்கு மரணத்தண்டனை!

Leave a Reply