கள்ள தொடர்பு விவகாரம்: தங்கையை அக்காள் ஆள் வைத்து காரில் கடத்திய கொடுமை!- சினிமா பாணியில் காரில் துரத்திப்பிடித்த பெல் காவல் நிலைய ஆய்வாளர்!- திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நடந்த பரப்பரப்பு.

காரில் கடத்தப்பட்ட புவனேஷ்வரி.

திருச்சி, திருவெறும்பூர்,  துவாக்குடி நகராட்சி பெண் பில் கலெக்டரை அவரது அக்காவே ஆள் வைத்து கடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் காஜாபேட்டை கீழகிருஷ்ணன் கோவில்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி புவனேஷ்வரி(34) இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 2009 ஆண்டு இறந்து விட்டார். இவர்களுக்கு  ஜெகதீசன்(17) கிருத்திகா(16) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

காரில் கடத்தப்பட்ட புவனேஷ்வரி.

புவனேஷ்வரி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சியில் பில் கலெக்டராக வேலைப்பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (15.02.2018) மாலை 6 மணிக்கு புவனேஷ்வரி பணி முடிந்து திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தப்போது, டாடா சுமோ காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், புவனேஷ்வரியை காரில் தூக்கி போட்டு கொண்டு தப்பி சென்றனர். அதைப் பார்த்த பொது மக்கள் சத்தம் போட்டதோடு, இருசக்கர வாகனங்களில் அந்த சுமோவை விரட்டி சென்றுள்ளனர்.

மேலும், இது சம்மந்தமாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், துவாக்குடி போலீசார், பெல் (Boiler Plant) காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

பெல் (Boiler Plant) காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம்.

அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், பெல் காவல் நிலையம் முன்பு பேரிகாடை வைத்து மறிக்க முயன்றப்போது, அவர்கள் மீது மோதுவது போல் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெல் (Boiler Plant) காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தனது சுமோவில் அந்த சுமோவை சினிமா பட பாணியில் விரட்டிச்சென்று, பொது மக்கள் உதவியுடன் திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே மடக்கி பிடித்தார்.

பின்னர் புவனேஷ்வரியையும், அவரை கடத்திய 4 பேரையும்,  துவாக்குடி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தப்போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

புவனேஷ்வரியின் அக்கா சரஸ்வதி(36), இவரது கணவர் கணேசன், இவருக்கும் புவனேஷ்வரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும், அதனை சரஸ்வதி கண்டித்ததாகவும், ஆனால், புவனேஷ்வரி கணேசனோடு இருந்த கள்ளத்தொடர்பை துண்டிக்காமல் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, தனக்கு தெரிந்த புதுக்கோட்டை மாவட்டம், உசிலங்குளம் 8-ம் தெருவை சேர்ந்த வேணுகோபால் மகன் அசோக் (எ) மூனிஸ்வரன் (27) என்பவரிடம், புவனேஷ்வரியை மிரட்டுமாறு சரஸ்வதி கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், மூனீஷ்வரன் தனது நண்பர்களான புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த பாலா மகன் மனோ(26), அதேப் பகுதியை சேர்ந்த நாகூரான் மகன் தீலீபன்சக்ரவர்த்தி(35), புதுக்கோட்டை அயணாவரத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் முத்துகுமார்(30) ஆகியோரை அழைத்து கொண்டு, முனீஷ்வரன் துவாக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருந்தார்.

மாலை 6 மணிக்கு பணியை முடித்து விட்டு புவனேஷ்வரி வெளியில் வந்தப்போது, சுமோவில் கடத்தி சென்றதாகவும், அப்படி போகும் போது தான் பிடிப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அவர்களிடம்  துவாக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சரஸ்வதியையும் பிடித்து விசாணை செய்தால்தான் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினார்கள்.

திருவெறும்பூர் பகுதியில் நடந்த இந்த கடத்தல் மற்றும் போலீசார் காரில் துரத்திப்பிடித்த சம்பவம் சினிமாவில் வருவது போல் இருந்ததென்று, அப்பகுதி பொது மக்கள் கூறினார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள அசோக் (எ) மூனிஸ்வரன், முத்துகுமார் ஆகியோர் மீது, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது என்பது, காவல்துறையினர் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

ஒரு வேளை புவனேஷ்வரி, பெல் (Boiler Plant) காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினரால் இன்று காப்பாற்றப்படவில்லையென்றால், புவனேஷ்வரி நிச்சயம் கொலை செய்யப்பட்டிருப்பார்.

-ஆர்.சிராசுதீன்.

 ullatchithagaval@gmail.com

Leave a Reply