திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் ஜல்லிகட்டு போட்டி!- 484 காளைகளும், 267 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில், ஆண்டு தோறும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருப்பகுதியாக இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் கூத்தைப்பாரை சேர்ந்த முனியாண்டவர் கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த மாடுகள் அவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு முறையாக வெளியூர் மாடுகள் அவிழ்க்கப்பட்டது.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு தங்க காசு மற்றும் சீலிங் பேன் வழங்கப்பட்டது. மாடுகள் களத்தில் நின்று விளையாடினால் அதற்கு கூடுதலாக ஒரு சீலிங்பேன் வழங்கப்பட்டது. அதே மாடு பிடிபட்டால் அந்த மாட்டை பிடித்த மாடு பிடி வீரருக்கும், பிடிப்படவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கும், கூத்தைப்பார் கிராம கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் 484 காளைகளும், 267 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிகட்டு போட்டி மதியம் 2.30 மணியளவில் நிறைவுப்பெற்றது. நேரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகளை அவிழ்த்து விட முடியவில்லை.

முன்னதாக திருச்சி மாவட்ட கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் எஸ்தர் ஷீலா தலைமையில் ஜல்லிகட்டு மாடுகளுக்கு போதை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா? மாடுகள் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியானதா? என்பதை பரிசோதனை செய்தனர். மொத்தம் 491 மாடுகளை பரிசோதனை செய்தனர், அதில் 7 மாடுகள் தகுதியில்லாதது கண்டு பிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டது. 

திருவெறும்பூர் வட்டார மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை  நடைப்பெற்றது.

மாடு பாய்ந்ததில் கூத்தைப்பாரை சேர்ந்த சுரேஷ்(22) துவாக்குடி ராஜா(28), திருச்சி முதலியார் சத்திரத்தை சேர்ந்த அமர்தாஸ்(33) ஆகிய 3 மாடுபிடி வீரர்களும், புதுக்கோட்டை மாவட்டம், குளத்துரை சேர்ந்த மாடு உரிமையாளர் சேகர்(24) உட்பட 27 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் 18 பேர் மாடு பிடிவீரர்கள், 5 பேர் மாட்டின் உரிமையாளர்கள், 4 பேர் பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பரமேஷ்வரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். திருவெறும்பூர் பயிற்சி ஏ.எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

போலீசாரின் பாதுகாப்பு பணியை திருச்சி சரக டிஐஜி பவானீஷ்வரி ஆய்வு செய்தார்.

ஜல்லிகட்டு போட்டியில் ஜல்லிகட்டு காளைகள் துன்புறுத்தப்படுகிறதா? என்பதை விலங்குகள் நலவாரிய அலுவலர்கள் மித்தல், கருணாகரன் ஆகியோர் கண்காணித்தனர்.

இதில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் உள்பட, வருவாய்துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply