பேருந்து நிலையம் இல்லாத மண்டபம் பேரூராட்சி!- அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் ! -அவதிப்படும் பொதுமக்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த மண்டபம் பேரூராட்சியில், பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பலமுறை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேருந்துநிலையம் இல்லாத காரணத்தினால் மண்டபம் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் மண்டபத்திற்குள் வர ஒட்டுனர்கள் மறுக்கின்றனர். இதனால் வெளியூர் வேலைக்கு சென்று வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த ஊரில் மீன் பிடி தொழில்தான் மூலதனம், அதனால் பக்கத்து கிராமங்களில் இருந்து மீன் பிடி தொழிலுக்கு வரும் மீனவர்கள், இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, மண்டபம் பேரூராட்சில் பேருந்து நிலையம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

 -எஸ். சையது இப்ராஹிம்.

 

 

 

Leave a Reply