மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் நாட்டியாஞ்சலி விழா!

திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் சிவ ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு அபிசேகம் நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒருப்பகுதியாக, திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவிலில் உள்ள நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர்கோவிலில் சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் வழிப்பாடுகள் இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி உத்தரவுப்படி, கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி தலைமையில் நடைப்பெற்று வருகிறது.

மேலும், நாளதி அறகட்டளை பரதநாட்டிய கலை குழுவினர் மற்றும் போத்தி ஜவுளி நிறுவனம் சார்பில், திருச்சி நாட்டியாஞ்சலி 2018 என்ற தலைப்பில் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி தற்போது நடைப்பெற்றுவருகிறது. 

இது நள்ளிரவு இரண்டு மணி வரை நடைபெறும்.

இந்த விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு, நாட்டியாஞ்சலியை கண்டு களித்து வருகின்றனர்.

அதேப்போல் கூத்தைப்பாரில் உள்ள ஆனந்த உடன் அமர் மருதீஸ்வரர் ஆலயத்திலும், திருநெடுங்குளத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலிலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைப்பெற்று வருகிறது.

-ஆர்.சிராசுதீன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை, ம.தி.மு.க பொதுச் செயலாளர்  வைகோ பார்வையிட்டார்!
பல்லடம் அருகே 9 வயது சிறுவன் கால்வாயில் முழ்கி பலி!– தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரின் அலட்சியத்தை கண்டித்து உறவினர்கள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை.

Leave a Reply