தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் ஸ்டாலினிடம் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

-கே.பி.சுகுமார்.

 

 

பல்லடம் அருகே 9 வயது சிறுவன் கால்வாயில் முழ்கி பலி!– தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரின் அலட்சியத்தை கண்டித்து உறவினர்கள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை.
ஜம்முவில் சன்ஜுவன் மிலிட்டரி ஸ்டேஷன் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல்.

Leave a Reply