மது வாங்கி தராத துப்புரவு பணியாளரரை தாக்கி மோதிரத்தை பிடிங்கிய வட மாநிலத்தினர்!- பல்லடம் அருகே நடந்த கொடுமை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வெட்டுப்பட்டான் குட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சண்முகம் வயது (45) தன் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது, அப்பகுதியில் குடியிருக்கும் வடமாநிலத்தினர் சண்முகத்தை வழி மறித்து நீ தமிழனா என கேள்வி எழுப்பினார்கள்.

அதன் பிறகு சண்முகத்தை அரசு மதுபானக்கடைக்கு சென்று மது வாங்கி வருமாறு மிரட்டினர். அதற்கு ஒத்துழைக்காத சண்முகத்தை ஆத்திரம் அடைந்த வட மாநிலத்தினர் வெறி கொண்டு தாக்கினர். பின்பு சண்முகத்தின் விரலலிருந்து தங்க மோதிரத்தை பிடிங்கினர். கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சண்முகத்தின் தலையில் பலமாக தாக்கினர். மயக்கமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார்.

அருகில் இருந்த பொதுமக்கள் சண்முகத்தின் வீட்டிற்கு தகவல் அளித்து அவருடைய மனைவி மற்றும் மகன் மூலமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

                       -மு. ராமராஜ்.

-ச.ரஜினிகாந்த்.

Leave a Reply