பதவி வெறிப்பிடித்து அலையும் சுப்ரமணியன் சுவாமி!-இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது, இந்திய குடியரசு தலைவரிடம் புகார்!

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதிலிருந்து இன்று வரை எப்படியாவது நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர், பாதுகாப்பு அமைச்சர்… இப்படி அதிகாரமுள்ள ஏதாவது ஒரு பதவியை அபகரித்துவிட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும், நோக்கத்தோடும், சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து முயற்சித்து வந்தார்.

இதற்காக மேற்காணும் பதவிகளை வகித்து வந்த நபர்களுக்கு பல்வேறு வகைகளில் வெளிப்படையாகவே தொல்லையும் கொடுத்து வந்தார்.

மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யும்போதெல்லாம், தனக்கான பதவி நிச்சயம் கிடைக்கும் என்று தவமாய், தவமிருந்தார். இலவு காத்த கிளிப்போல காத்தும் இருந்தார். ஆனால், அவர் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசைப்பற்றி வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கினார். இவரதுத் தொல்லை தாங்க முடியாமல், வேறு வழியின்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமிக்கு, பா.ஜ.க. தலைமை வழங்கியது.

இதில் திருப்தியடையாத சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக தன்னை நியமிக்க வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். பிரதமர் நரேந்திர மோதியிடம் இவரது ஜம்பம் சாயவில்லை.

இதில் மேலும் விரக்தியடைந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோதியையும் வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளார். அவற்றின் தொடர்ச்சிதான் தற்போது சோபியான் துப்பாக்கிச்சூடு தொடர்பாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி புகார் கடிதம் எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதி, இந்த நாட்டிற்கு செய்த மிகப் பெரிய நல்ல காரியம் என்ன தெரியுமா? தனது     அமைச்சரவையில், இந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமிக்கு எந்த அங்கீகாரமும் வழங்காமல் இருந்ததுதான்.  இந்த ஒரு காரியத்திற்காகவே பிரதமர் நரேந்திர மோதிக்கு நாம் நன்றிச் சொல்ல வேண்டும்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி எழுதிய புகார் கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்!
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் "மேரே சப்னோ கா பாரத்", என்ற புத்தகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

Leave a Reply