பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு! குடியரசு தின விழாவை முன்னிட்டு பேப்பரினாலான தேசிய கொடி இலவசம்!- 10 ஆண்டுகளாக தொடரும் தனிநபர் சாதனை.

சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் தியாகு தாமஸ். இவர் ஏற்காடு ரோஜா தோட்டம் பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக இவர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் பேப்பரினாலான தேசிய கொடியை மூங்கில் குச்சியில் ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

அதன்படி இந்த ஆண்டும் குடியரசு தினத்திற்காக இரண்டாயிரம் பேப்பர் தேசிய கொடிகளை தயாரித்துள்ளார். இந்த கொடிகளை சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 25.01.2018 முதல் இலவசமாக வழங்க உள்ளார்.

-நவீன் குமார்.

 

Leave a Reply