பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருச்சி ஈ.வெ.ரா. அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஈ.வெ.ரா. அரசு கல்லூரி  மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை பழைய கட்டணத்திற்கு மாற்றவேண்டும் என்று இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தங்களை கல்லூரிக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. ஏன் என்றால், பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதன் காரணமாக கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் அதிக கட்டணம் கொடுத்து பேருந்தில் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறுவதாக மாணவி ஒருவர் நம்மிடம் கூறினார்.

மேலும் ஒரு மாணவர் நம்மிடம் கூறுகையில், அரசு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அல்லது மக்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தைக் கொடுத்தால் இது போன்ற பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும் என்றார்.

மாணவர்கள் போராட்டத்தை அரசு கவனத்தில் கொள்ளாவிட்டால் மீண்டும் மாணவர்களின் எழுச்சி நடைபெறும் என்றும், அரசுக்கு எதிராக அனைத்து மாணவர்களையும் திரட்டி போராடுவோம் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

-ச.ராஜா.

-மு.துளசி மணி.

Leave a Reply