பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்பாப்பட்டம் மற்றும் சாலை மறியல்!

தமிழக அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. அதனை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டம் சாலை மறியில் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருப்பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமுதனலெட்சுமி கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து அதன் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில், வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுளைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் பொது மக்களொடு இணைந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கும், திருவெறும்பூர் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், ஜல்லிகட்டுக்கு போராட்டம் நடந்தது போல் போராட்டம் தொடரும் என்று கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply