திருவாரூர் திருத்தலையாலங்காடு நர்த்தபுரீஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசை பெருவிழா!


திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சிமிழி கிராமத்திற்கு அருகில் திருத்தலையாலங்காடு என்கிற தலத்தில் அமைந்துள்ள   நர்த்தபுரீஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசை பெருவிழா நடைபெற்றது.

ரோக நிவர்த்தி பரிகார தலமாக விளங்க கூடிய ஸ்ரீ பாலாம்பிகை சமேத நர்த்தினபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை பெருவிழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

தை மாதம் இரண்டாம் நாள்  (15.01.2018) திங்கள்கிழமை மாலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கப்பட்ட இந்த விழா, தை மாதம்  மூன்றாம் நாள்  (16.01.2018) அமாவாசையான இன்று பஞ்ச மூர்த்தி வீதியுலா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திருகுளமான சங்க தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 -ஜி.ரவிச்சந்திரன்.

 

திருவாரூரில் நடைப்பெற்ற சைக்கிள் மற்றும் குதிரை பந்தயம் ...!-வீடியோ.
திருச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற்றது!

Leave a Reply