காணும் பொங்கலை முன்னிட்டு திருவாரூரில் சீறிபாய்ந்த குதிரைகள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக ஆங்காங்கே பல்வேறு கிராமங்களில் பொது இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு குதுகலமாக கொண்டாடினர்.

தை முதல் நாள் பொங்கல் திருநாளில் பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர். மறுநாள் தை    இரண்டாம் நாள்     உழவர் திருநாள் கொண்டாடப்பட்டது.

இன்று    காணும்      பொங்கலை முன்னிட்டு கிராமங்களில் கயிறு இழுத்தல், இசை நாற்காலி, ஓட்டப் பந்தியம், மாட்டு வண்டி பந்தியம், குதிரை பந்தயம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் களைகட்டின.

திருவாரூரில் ஆரூரன் விளையாட்டு கழகம் சார்பில், ஆரூரன் கோவிலையை சுற்றி குதிரை பந்தயம்  நடைபெற்றது.

இன்று (16.01.2018) மாலை 5.00 மணியளவில் பத்துக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பந்தயத்தில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. நான்கு வீதிகளில் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் கரகோஷம் எழுப்பி கண்டுகளித்தனர்.

அதேபோல் திருவாரூர் கமலாலய குளத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் கூடினர். அவர்கள் குளத்தின் நடுவே அமைந்துள்ள மண்டபத்திற்கு படகில் சென்று சாமி தரிசனம்   செய்து திரும்பினர்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் தீயனைப்பு துறையிiர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

-க.குமரன்.

Leave a Reply