கவிஞர் வைரமுத்தை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் கண்டன பேரணி!

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் அழகரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம்  வரை கண்டன பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திவ்ய தேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் மன்னார்குடி மடம் செண்டலங்கார ஜீயர், ரெங்கநாதர் கோவிலை சேர்ந்த சுந்தர் பட்டர், தீபக் பட்டர், கோவில் அர்ச்சகர்கள், திருப்பணியாளர்கள் ,திருவரங்கம் நகர் நலச் சங்கத்தினர் ,பா . . .வினர் ஆர் .எஸ்.எஸ்அமைப்பினர் ,கோவில் குருக்கள் , திவ்ய தேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை தலைவர் கோவிந்தன், செயலாளர் மாதவன், திருவரங்கம் கோவில் அறங்காவலர்  குழு தலைவர் வேணு சீனிவாசன், முன்னாள் அறங்காவலர் குழு  தலைவர் வெங்கடாச்சலம், சமாஜ்வாதி  கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் நீலமேகம், பி .ஜே .பி.யை  சேர்ந்த சரவணன்பி.ஜே .பி நிர்வாகி  திருவேங்கடம் யாதவ் ,  எம் .ஜி ..ஆர் .அம்மா தீபா பேரவை  மாவட்ட செயலாளர் ஆர் .சி .கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-எஸ்.ஆனந்தன்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
குட்கா வழக்கு விவகாரம்: தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

Leave a Reply