மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி!

amma samathi tn gov.ministers amma samathi tn gov.ministers1

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், இன்று (12.01.2018) சென்னை, மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

-எஸ்.திவ்யா.

 

குட்கா வழக்கு விவகாரம்: தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!
ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தங்கத்தேர் இழுத்தனர்!

Leave a Reply