தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!- திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

tn.Assmbly4

tn.Assmbly2tn.Assmbly1tn.Assmblytn.Assmbly3tn.govrnorதமிழக சட்டசபையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

சட்டசபைக்குள் ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  சபாநாயகர் இருக்கைக்கு வந்த ஆளுநர், சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை துவங்கினார்.

வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது உரையை துவங்கினார்.  அதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி, விவாதத்தின் போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறிய ஆளுநர், தமிழில் உட்காருங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். 

இருப்பினும், ஆளுநரை பேசவிடாமல் அவையில் கூச்சல், குழப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.  தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

-சி.வேல்முருகன்.

 

Leave a Reply