ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனு ஏற்பு : விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா நாளை விசாரிக்கிறார்!

Hon'ble Mrs. Justice Rathnakala

By Order of Hon'ble The Chief Justiceசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெ.ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் கோரி ஜெ.ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு விடுமுறைகால கோர்ட்டு நீதிபதி ரத்னகலா முன்பு இன்று (30.09.2014) விசாரணைக்கு வந்தது. ஜெ.ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார்.

Ramjeth Malaani

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார். அதாவது, இந்த வழக்கில் ஆஜராவது குறித்து கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவில்லை. கர்நாடக அரசின் அறிவிப்பாணை வரும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்

கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்

ஜெ.ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, “உடனடியாக ஜாமீன் அளிக்கலாம், ஏனெனில் சிறைத் தண்டனை 4 ஆண்டுகள் என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது” என்று வாதாடினார். “

அரசு தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஜாமீன் மனுவை உடனடியாக பரிசீலிக்க இயலாது” என்று கூறிய நீதிபதி ரத்னகலா வழக்கை வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஜாமீன் மனுவை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற பதிவாளரை அணுகலாம் என்று கூறிய நீதிபதி ரத்னகலா கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டார்.

இதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர்  பி.என்.தேசாயிடம், 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட மனுவை அவசர மனுவாக நாளையே விசாரிக்கக் கோரி ஜெ.ஜெயலலிதா தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்

கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்

சிறை தண்டனை காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்பதால், 389 (1) பிரிவின் கீழ், அரசு தரப்பு பதில் இல்லாமலேயே ஜாமீன் பெற முடியும். எனவே ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

இதனையடுத்து ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை ஏற்ற கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.என்.தேசாய், மனுவை நாளை (01.10.2014) விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீட்டு மனுவை விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா நாளை விசாரிக்கிறார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in