தூத்துக்குடி சிறுவிசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

Photo0096 Photo0098தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தின்படி 65 அடி நீளம் மற்றும் 150 குதிரைத் திறன் கொண்ட படகுகளுக்கு மட்டுமே மீன் பிடிக்க அனுமதியுண்டு.

ஆனால், இங்கு சட்ட விரோதமாக 85 அடி நீளம் மற்றும் 150 குதிரைத் திறனுக்கு மேற்பட்ட 19 விசைப்படகுகள் அனுமதியின்றி மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், உரிய அனுமதி பெற்று தமிழக அரசின் மானியம் பெற்று மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் சிறு விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் பெரிய விசைப்படகுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அதற்கு துணைபோகும் நிர்வாகத்தை கண்டித்தும், இன்று (23.07.2014 புதன்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தூத்துக்குடி சிறு விசைப்படகுகளின் சங்கத்தலைவர் இராஜேந்திரன் நம்மிடையே தெரிவித்தார்.

-பொ.கணேசன் @ இசக்கி.