பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோகம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் : போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வேதனை!

போப்பாண்டவர் பிரான்ஸிஸ்

போப்பாண்டவர் பிரான்ஸிஸ்

கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள இருந்து வரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11- ம் நூற்றாண்டு முதல் இருந்து வருகின்ற விதிமுறையை மாற்றுவதற்கான தீர்வுகள் உண்டு என்றும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது வேலை என்றும் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் என்றும் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பேராயர்களிலும், கார்டினல்களிலும் கூட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமாரிகளில் சுமார் இரண்டு சதவீதம் பேர் சிறார்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேவையான கண்டிப்போடு இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் உறுதியுடன் இருப்பதாய் அவர் தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.