சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள்!

housing board 4 housing board 2 housig board12சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவில் உள்ள போட்டுக்காடு கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக 67 வீடுகள் கட்டப்பட்டது. அப்போது இந்த வீடுகள் இருக்கும் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் எந்த வீடுகளும் விற்கபடவில்லை. விற்கபடாமல் இருக்கும் வீடுகள் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

வீட்டுவசதி வாரியத்தின் பாதுகாப்பும், கண்காணிப்பும் இல்லாததால், சமூக விரோதிகள் இந்த வீடுகளை மது அருந்தும் கூடமாக தற்போது பயன்படுத்தி வருகின்றனர்,

மேலும், அந்த வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல் , தண்ணீர் டேங்க் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான ஒரு சில பொருட்களைத் திருடியும் சென்று விட்டனர்.

இந்த வீடுகள் எந்த காலத்திலும் விற்கப்படாது எனும் எண்ணத்தில் ஒரு வயதான பெண்மணி இந்த வீடுகளின் வாசல்களில் பீண்ஸ் காய்களை வளர்த்து வருகிறார்.

தற்போது அந்த வீட்டிற்கு அருகிலேயே பக்கத்து கிராமத்திற்காக போர் போட்டபோது தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளப் பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்,

எனவே, இந்த வீடுகள் அனைத்தையும் புனரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி விற்பனை செய்தால், வீட்டுவசதி வாரியற்கு வருவாய் கிடைக்கும். இதற்கு பிறகாவது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறை காட்டுவார்களா?

-நவீன் குமார்.