தொட்டியம் அருகே மணல் லாரி மோதியதில் பெண் காயம்!

Prema k thottiam ams govt busதிருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, மணல் லாரி மோதியதில் பெண் காயம் அடைந்தார். கிளிஞ்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பிரேமா. இவர் தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் பள்ளி குழந்தைகளின் சமையலுக்கு தேவையான காய்கறி, முட்டை மற்றும் பொருட்களை வாங்கி கொண்டு, இன்று (16.06.2014) காலை 10.45 மணியளவில் பள்ளிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சி – சேலம் சாலையில், தொட்டியம் வாய்க்கால் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, எதிர் எதிரே TN-28: AY.1161 என்ற மணல் லாரியும்,     TN-30: N.0693 என்ற அரசு பேருந்தும் பாலத்தைக் கடக்க முயன்ற போது, மணல் லாரி பிரேமா மீது மோதியதில், பிரேமா பாலத்தில் இருந்து வாய்க்காலுக்குள் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாய்க்கால் பாலம் குறுகலாக இருப்பதால்தான், அடிக்கடி இதுப் போன்ற விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

-தொட்டியத்திலிருந்து பி.மோகன்ராஜ்.