விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டத் தடை சரியா? டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் தீர்ப்பாயம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

 

Justice G.P. Mittal

Justice G.P. Mittal

159794 copyதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு, இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை சரியா? என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதற்கான உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராகேஷ்சிங், கடந்த ஜூன் 5-ம் திகதி வெளியிட்ட அரசாணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா? என்பதை அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 14-ம் திகதி மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.