இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது!

logo-ministry-of-external-affairssl

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக் குறித்து, இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்றும் (05.05.2014) இன்றும் (06.05.2014) நடைபெற்றது.

இந்திய அணுசக்தித் துறைப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் (ஆயுதம்) அமன்தீப் சிங் கில் தலைமை வகித்தார்.

இலங்கை அணுசக்தி அதிகார சபை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கை அணிக்கு தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜேதிலக தலைமை வகித்தார்.

சிவில் அணுத் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தத்தின் நகல் ஒன்றைத் தயாரிப்பது குறித்து இரு தரப்பினரும் கலந்தாலோசனை செய்தனர் என இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவில் அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.