கற்பழிக்கப்பட்ட சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிகளுக்கே கல்யாணம் செய்து வைக்கலாம்: இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷே!

_MAHINDA__

இலங்கையில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளார்களே, அவர்கள் மறுவாழ்வு எப்படி அமையப்போகிறது? என்று செய்தியாளர் ஒருவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவிடம் கேட்டபோது, அதற்கு அவர் குற்றம் புரிந்த (அதாவது கற்பழித்த) நபருக்கு அப்பெண்ணை கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷே தெரிவிக்கும் கருத்து என்னவென்றால், யாரும், யாரையும் கற்பழிக்கலாம். பின்னர் கல்யாணம் செய்துகொண்டால், அக்குற்றம் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

கற்பழிப்பது ஒரு குற்றச்செயலாகும். அதற்கு தண்டனை உண்டு. ஆனால், இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷே, கற்பழிக்கப்பட்ட பெண்ணை அந்த ஆண் கல்யாணம் கட்டினால், அவரது தண்டனை குறைக்கப்பட்டு, அவர் விடுதலையாவர் என்று கூறியுள்ளார். இதனை பெண்கள் அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.