தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், மனைவி உயிருடன் இருப்பதாகவும் நரேந்திர மோதி எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்!

Narendra Modi BJPNarendra Modi BJP.png1

தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், மனைவி  உயிருடன் இருப்பதாகவும், மனைவியின் சொத்து விவரம், வருமானம் தனக்கு தெரியாது என்றும் நரேந்திர மோதி தனது வேட்பு மனுவில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வடநகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவருடைய தந்தை பெயர் தாமோதர்தாசு முல்சந்மோதி, அவரது தாயார் பெயர் ஃகீரபேன்னு. நரேந்திர மோதிக்கு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்.  இவர் மூன்றாவதாக பிறந்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் குஜராத் முதலமைச்சராக இருந்துவரும் நரேந்திர மோதி, கடந்த காலங்களில் 4 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார்.

NARENDRA_DAMODARDAS_MODI 2012 assNARENDRA_DAMODARDAS_MODI 2012 ass.2jpg

நரேந்திர மோதி 2012 ஆம் ஆண்டு மணிநகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது

நரேந்திர மோதி 2012 ஆம் ஆண்டு மணிநகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது

கடந்த 2012 ஆம் ஆண்டு மணிநகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது கூட, வேட்பு மனு விண்ணப்பத்தில் திருமணம் குறித்த இடத்தை பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தார்.

இதனிடையே நரேந்திர மோதி.  தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோதி, 09.04.2014 அன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Jashodaben Chimanlal Modi.

நரேந்திர மோதி மனைவி ஜஷோட பென்

நரேந்திர மோதி மனைவி ஜஷோட பென்

அந்த மனுவில் தாம் திருமணமானவர் என்றும், தனது மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனைவியின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என வேட்பு மனுவில் மோதி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதியின் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தை வதோதரா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள காட்சிப் பலகையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள மோதியின் மூத்த சகோதரர் தாமோதர், நரேந்திர மோதி சிறுவனாக இருக்கும்போது தனது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால், அவர் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்றும், இந்த தேசத்தையே மோதி தனது குடும்பமாகத்தான் பார்க்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சிறுவயதில் நரேந்திர மோதி திருமணம் செய்துகொண்ட ஜஷோட பென்னுக்கு தற்போது 62 வயதாகிறது.

அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜஷோட பென்னுக்கு மாதம் ரூ. 14,000 ஓய்வூதியம் வருகிறது. அவர் தனது சகோதரர் உடன் மேற்கு குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.

நான் என் கணவருக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாது. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நான் வாழ வேண்டும். நான் விளைவுகளை ண்டு பயப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இப்பிரச்சனை இந்திய அரசியலில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளும், துணைவிகளும் இருக்கிறார்கள் என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். அப்படி இருக்கும்போது தனக்கு திருமணம் ஆகிவிட்ட விபரத்தை நரேந்திர மோதி  இவ்வளவு காலம் மறைத்தது ஏன்?

2001 ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் நரேந்திர மோதி, தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தன்னைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?

இப்பவும் தானாக முன் வந்து தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நரேந்திர மோதி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியாமல்தான் வேறு வழியில்லாமல் தனது வேட்பு மனுவில் நரேந்திர மோதி எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே நரேந்திர மோதி எப்படிப்பட்டவர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால், தலைவர்கள் ஒழுக்கமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும், இது மேலே நாடுகளில் உள்ள மரபு! ஆனால் மக்கள் மட்டும் ஒழுக்கமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும்! ஆனால், தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இது இந்திய நாட்டின் மரபு! என்ன செய்வது எல்லாம் நம் தலையெழுத்து.

– டாக்டர்.துரைபெஞ்சமின்