ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் கூட்டு படைகளின் தலைவர்!

rasad_mahinda_

Pakvisit

பாகிஸ்தான் பொது பணியாளர்கள் குழுவின் கூட்டு படைகளின் தலைவரான ரஷாத் மஹ்மூத் இன்று (08.04.2014) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது ரஷாத் மஹ்மூத், தமிழீழ விடுதலை புலிகளுடன் மூன்று தசாப்த காலமாக நடந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்தமை பெரிய சாதனை என்று பாராட்டியுள்ளார்.

மேலும், இதற்காக இலங்கை செய்த தியாகங்களை, பாகிஸ்தானை விட வேறு எந்த நாடும் புரிந்துகொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.

இந்த வெற்றியானது  நாட்டில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியதையும், அது உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் கற்று கொள்ள உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.அத்துடன், வடக்கில் போருக்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சந்திப்பின்போது, ரஷாத் மஹ்மூத்துடன் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) காசிம் குரேஷியும் கலந்து கொண்டார்.