இலங்கை கடற்படை மற்றும் தரைப்படைகளின் ஆதிக்கத்தில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா!

kachtivu festival.jpg2kachtivu festivalkachtivu festival.jpg3kachtivu festival.jpg6

kachtivu festival.jpg5jpg

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி, 2008-ம் ஆண்டு  அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

 உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது கச்சத்தீவு  இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று இந்திய அரசு விளக்கம் மனு அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழகத்தின் உரிமைகளுக்கு விரோதமாகவும் காங்கிரஸ் தலைமையிலான  மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 ‘கச்சத்தீவு இலங்கையிடமிருந்து நிச்சயமாக மீட்கப்படும்’ என்று நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்தி திருவிழா 16.03.2014 ன்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விழாவில்   இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஆண்டு இந்தத் திருவிழாவை இலங்கை அரசாங்கம் மிகவும் கோலாகலமாக நடத்தி முடித்திருக்கிறது.

கச்சதீவை மீண்டும் இந்தியாவிடமே மீட்டு எடுத்துவிட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தால் இந்திய மத்திய அரசிடம் வற்புறுத்தி முன் வைக்கப்படுகின்ற சூழலில் நடைபெற்ற இவ்வாண்டின் திருவிழாவை, கச்சதீவில் தனது ஆதிக்கத்தைத் தெளிவாகக் காட்டும் விதமாக இலங்கை அரசாங்கம் நடத்தியிருக்கின்றது.

கச்சதீவின் முகப்பில் “இலங்கை உங்களை வரவேற்கின்றது” என்ற அறிவிப்பு பாதகை வைக்கப்பட்டிருந்தது, திரும்பிய பக்கம் எல்லாம் இலங்கையின் தேசியக்கொடிகள் பறந்தன.

போக்குவரத்து, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உட்பட திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கைக் கடற்படையே செய்திருந்தது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின்  வழிகாட்டல்களுக்கு அமைவாக கடற்படைத் தளபதி வைஸ அட்மிரல் ஜெயந்த கமகே இந்த ஏற்பாடுகளை நேரடியாக மேற்பார்வை செய்தார்.

3,100 இந்திய வர்த்தகர்கள் 95 படகுகளில் வந்து கலந்து கொண்டிருந்த இந்தத் திருவிழாவில் இலங்கைக் கடற்படை மற்றும் தரைப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவில் சுதந்திரமாக நடமாட வேண்டிய நம் தமிழ் மக்கள் இன்று அங்கு அகதிகளாக சென்று வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்க வேண்டுமானால் கச்சத்தீவு நம் கைவசம் வந்தாக வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு : தொழிலாளி பலி!
சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம்! பருவமடைந்து பத்து நாளான சிறுமியை கைது செய்த இலங்கை இராணுவம் !