கடத்தப்பட்ட மலேசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பெயர் பட்டியல் விபரம்!

 malasia airlinesflight-mh370-flight-path

கடந்த 8-ஆம் தேதி பின்னிரவு 12.41க்கு பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட MH370 விமானம் அன்றைய தினம், காலை 6.40 மணிக்கு பெய்ஜிங் மண்ணை மிதித்திருக்க வேண்டும். ஆனால் மாயமாய் மறைந்து போனது. மனிதனின் அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளுக்குச் சவால் விடும் வகையில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. உலகமே இவ்விவகாரத்தில் நிலைக்குத்தியுள்ளது.

 இதுவரை  விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆருடங்களும் பரப்பிவிடப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் கடத்தினார்கள் என்றும், கடலில் விழுந்தது என்றும், சிலர் விமானத்தை பார்த்ததாகவும், விமானத்தின் சமிஞ்சைகள் வலுக்கட்டாயமாக செயலிழக்கப்பட்டது என்றும் பல்வேறு கோணங்களில் ஆருடங்கள் மக்களிடையே பரவி வருகிறது.

இன்னும் சிலர், கூகுள் (google) வரைப்படத்தில் விமானத்தைக் கண்டதாகவும் கூறி வருகின்றனர். இதற்கு கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. தங்கள் வரைபடத்தில் அவ்வளவு நுணுக்கமான படங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

ஏழு நாள்கள்  ஆன  பிறகும்  காணாமல்போன  விமானத்தைக்  கண்டுபிடிக்க  முடியாமல்  இருக்கின்ற  நிலையில், அவ்விவகாரம்  தொடர்பில்  முரண்பட்ட  தகவல்களை மலேசியா  அரசு கொடுப்பதால்  லக அரங்கில் மலேசியா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

Malaysia's acting transport minister Hishammuddin Hussein1மலேசியா விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள், மலேசியா விமான நிறுவனம் மற்றும் மலேசியா நாட்டு அரசாங்கம் இந்த விமானம் தேடும் பணியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். காரணம் “Pentagon” அளித்த தகவலின் படி, விமானத்தின் சமிக்ஞ்சை தொடர்பு கருவிகள் 2 வெவ்வேறு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. (Not a sudden failure) விடியற்காலை 1.30 மணி அளவில் விமானத்துடன் தொலை தொடர்பு நின்று போயும், மேற்கூறிய 3 அதிகாரத்துவ இலாக்காக்கள் காலை 5.30 மணிக்குத்தான் விமானத்தை தேடும் பணியை ஆரம்பித்து உள்ளனர்.

ஆக, விமானத் தொடர்பு நின்று போய் 4 மணி நேரம் கழித்துதான் அவர்கள் செயல்படவே ஆரம்பித்து உள்ளனர். இவர்கள் திறமையானவர்கள் என்றால் இந்த 4 மணி நேரங்களில் உடனடியாக அந்நிய நாட்டு செயற்கை கோள் நிறுவனங்களின் உதவியை நாடி விமானத்தை தேடி இருக்கலாம்.

உடனடியாக அந்நேரத்தில் தென் கிழக்கு ஆசியாவில் பறந்து கொண்டு இருக்கும் விமானங்களை தொடர்பு கொண்டு தொடர்பு விட்டு போன விமானத்தை கண்காணிக்க வேண்டுக்கோள் விடுத்திருக்கலாம். இதை வியாட்நாம் கண்ட்ரோல் ரூம் செய்ததாக செய்தி வந்தது.

ஆனால், மலேசியா விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் “search & rescue” பணியில் 4 மணி நேரம் காலம் தாழ்த்தியது ஒரு மாபெரும் அறிவிலித்தனம், கையாலாகாதத்தனம் என்று கூற வேண்டும்.

இந்த 4 மணி நேரமும் அந்த MH 370 வான்வெளியில் சமிக்ஞ்சை தொடர்பு அற்று பறந்துக் கொண்டு இருந்தது உண்மையானால், இதற்கு மலேசியா நாட்டு அரசாங்கமும், மாஸ் விமான நிறுவனமும் முழு பொறுப்பு ஏற்று, இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் அவ்விமானத்தை கரை சேர்க்க முடியாமல் போனதற்கு மேல் நிலை அதிகாரிகள் உடனடியாக அவர்தம் பதவில் இருந்து விலக வேண்டும். இல்லையேல், இவ்வாறான மட்டிகளை வைத்துக் கொண்டு மலேசியா மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்புடன் வாழ இயலாது.

MH370MH370.jpeg2MH370.jpeg3MH370.jpeg4MH370.jpeg5MH370.jpeg6MH370.jpeg7227 பயணிகளும், விமானிகள் உட்பட 12 பணியாளர்களும் ஆகமொத்தம் 239 பேருடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள்  கூறுகின்றன.

கடத்தலின் உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.

web-mal-passports-epa Malaysia Airlines flight MH370 vanishes, Kuala Lumpur, Malaysia - 11 Mar 2014

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.

அந்த உறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீனஅரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

 

தே.மு.தி.க முதல் வேட்பாளர் பட்டியல்
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் எச்சரிக்கை : இலங்கை யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 116 தமிழக மீனவர்கள் விடுதலை!