தி.மு.க. கட்சிலிருந்து மு.க. அழகிரி நீக்கம்!

மு.க. அழகிரிதி.மு.க.வில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதால் அவர்  நீக்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். அழகிரி கட்சியின் உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.