இஸ்ரேல்க்கும், பாலஸ்தீனத்திற்கும் சமாதானத் திட்டம்: அமெரிக்கா முயற்சி!

peace-between-israel-and-palestineஅமெரிக்க இராஜாங்க அமைச்சர் கெறி இஸ்ரேல்க்கும் பாலஸ்தீனத்திற்குமான இறுதிச் சமாதான வரைவை வழங்கவுள்ளார் எனத் தெரிகிறது இது ஒரு மிகவும் பரந்த நோக்கத்துடன் வரையப்பட்ட ஒரு வரைவு எனவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்த சமாதானத்திற்கான வரைவு இறுதியாக மத்திய கிழக்கில் சமாதானத்திற்கான ஒரு ஒப்பந்தமாகவிருக்கும் எனவும் கெறி குறிப்பிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இவற்றைச் சமர்ப்பிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளிவிவகாரக் காரியாலயத்திலிருந்து அதிகாரி வெளியிட்ட கருத்தின் பிரகாரம் கெறி குறிப்பிட்ட தனது வரைவு பற்றி இஸ்ரேலியப் பிரதமர் நெத்தனியாகுவுடனும் பாலஸ்தீனியத் தலைவரான முஹமட் அப்பாசுடனும் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது. கெறி தயாரித்துள்ள வரைவில் குறிப்பிட்ட இரு நாடுகளின் முக்கிய பிரச்சினைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக முக்கிய பிரச்சினையான பல சகாப்தங்களாக சச்சரவை உருவாக்கிக்கொண்டிருந்த இஸ்ரேல் பாலஸ்தீனியத்தினது எல்லைப்பகுதிகள், பாதுகாப்பு ஒழுங்குகள், அகதிகள், முரண்பாடான புனித நகரமான ஜெருசலம் போன்ற விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு நாடுகளும் திரும்பவும் வரும் ஜீலை மாதத்தில் சமாதானம் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு கெறியினுடைய பலத்த வற்புறுத்தலின்பேரில் இணங்கியிருக்கின்றன எனத் தெரியவருகிறது. இரு நாடுகளுக்கும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.

பாலஸ்தீனம் யூதர்களின் புதிய குடியேற்றங்களை நிறுத்தும்படி கோருவதைக் கைவிடும்படியும், இஸ்ரேல் நீண்டகாலமாக சிறையில் வைத்திருக்கும் பாலஸ்தீனிய சிறைக்கைதிகளில் 106 பேரை விடுதலை செய்வதாகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.