அமெரிக்காவின் உளவு பார்க்கும் செயலுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் !

_Obama_Watching_US- spy

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்பட உலகின் அதிமுக்கிய அரசியல் தலைவர்கள் 35 பேரின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் இடைமறித்து ஒட்டுகேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இது தொடர்பாக ஐ.நா. சபையில் புகார் அளிக்க உள்ளதாகவும் பேட்டியளித்தார்.

இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் அமெரிக்காவின் இந்த போக்கு தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய கூட்டுப் போரில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் நட்புறவு நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் ஆனதாக இருக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய கூட்டுப் போரின் பங்காளிகள் என்ற முறையில் நமது நம்பிக்கைகள் மறு புணரமைப்பு செய்யப்பட வேண்டும்.

நண்பர்களுக்குள் உளவு பார்க்கும் செயல் தீவிரவாதம் தொடர்பான உளவு சேகரிப்பில் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.