கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய் துறை சேர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

sc

ktKatchatheevu_churchதமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த கச்சத்தீவை 1960-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது என்று கூறி, 2008-ம் ஆண்டு  அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கச்சத்தீவு வழக்கில் தங்களை பிரதிவாதியாக சேர்க்கக் கோரி தமிழக வருவாய் துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று (30.08.2013) நடந்தது.

விசாரணை முடிவில் கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய் துறையை பிரதிவாதியாக சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான ஆவணங்களை 3 வாரத்துக்குள் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Reply