பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : கார்கில் எல்லையில் கடும் சண்டை!

kargileஇந்தியாவுடன் தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் 5 இந்திய வீரர்களை கொன்ற பாகிஸ்தான், தொடர்ந்து இந்திய ராணுவத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் பதட்டம் நீடிக்கிறது.

இந்நிலையில், கார்கில் களத்தில் பாகிஸ்தான் தனது அத்துமீறலை ஆரம்பித்திருக்கிறது. கார்கில் பகுதியில் திராஸ் மற்றும் சுக்ஸர் களத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று (16.08.2013) துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த அத்துமீறலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம், 11 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

1999-ம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியபோது, கடும் போர் நடந்தது. இந்த சண்டையில் இந்திய படைகளிடம் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது. 14 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இப்போது கார்கில் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply