இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்!

insvikrantஇந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது.

INSVIKRANT1260  மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும்.

இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும் பிற கட்டுமான பணிகளுக்காக ஐ.என்.எஸ். விக்ரந்த் அந்த தளத்தில் இருந்து வேறு தளத்திற்கு மாற்றப்படுகிறது. இதன் தொடக்க விழா கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று (12.08.2013)தொடங்கியது.

எதிர்வரும் ஜூன் 2014ம் ஆண்டு வரை இந்தக் கப்பல் அதன் உள்பகுதி முழுமையாக்கலுக்காக கட்டுமானப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டு, 2016 -ம் ஆண்டில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு, 2018-ம் ஆண்டில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் சுயமாக பெரிய அளவிலான விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வடிவமைத்து தயாரிக்கும் திறன் பெற்று உள்ளன. அந்த பட்டியலில் இப்போது புதிதாக இந்தியாவும் சேர்ந்து இருக்கிறது.

 

Leave a Reply