நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும்: தா.பாண்டியன்

t.pandianஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு கூட்டம் இன்று (31.03.2013) தஞ்சையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று காலை தஞ்சைக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். அது மிகவும் தவறு. இலங்கையில் நடப்பது உள்நாட்டு விவகாரம் என்றால், அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது ஏன்?. இலங்கையில் நிவாரண பணிகளை முடுக்கி விட மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு தொடர்ந்து நடைபெற அருகதை இல்லை. ஜனநாயகத்தை மதித்து ஜனாபதியிடம் ஒப்படைத்து விட்டு காபந்து அரசை பிரதமர் வழிநடத்தலாம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், வங்கியில் கிளார்க் வேலை காத்திருக்கிறது. நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும்.

 

Leave a Reply