கருணாநிதி சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கிறது :மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

G_RAMAKRISHNAN

G.RAMAKRISHNAN

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தையும் தி.மு.க. தலைமை ஆதரித்தது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அது வரக்கூடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டார்.

 பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்றார். அதற்கான வாக்கெடுப்பு நடந்த போதும் மத்திய அரசை ஆதரித்தார்கள்.

 தி.மு.க. தலைமை மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி ஏற்பட்டு இருக்கிற இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் இருந்து விலகியதாக கூறியுள்ளார். இதுவும் ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  கருணாநிதி சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கிறது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply