இலங்கை அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா சென்ற சுப்பிரமணியசுவாமி!

Dr. Subramanian Swamy called

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ளத் தீர்மானத்தை  பலவீனப்படுத்துவதற்கும், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியை இலங்கை அரசு களமிறக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Dr. Subramanian Swamy calledஇலங்கை அரசின் அழைப்பின் பேரில் கடந்த 28.02.2013 அன்று, கொழும்பு சென்ற சுப்பிரமணிய சுவாமி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும் அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்தார்.

subramaiyasamy with obamaஇதையடுத்து, அமெரிக்கா சென்ற சுப்பிரமணியசுவாமி, இலங்கை அதிபர் மகிந்தர் கொடுத்த சில வாக்குறுதிகளை இவர் கொண்டு சென்று பராக் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார். தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷயுடன் றொபேட் ஓ பிளேக்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷயுடன் றொபேட் ஓ பிளேக்

தனிப்பட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு இது என்று கூறப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான தரகராகவே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

றொபேட் ஓ பிளேக்

சுமார் ஒரு மணிநேரம் றொபேட் ஓ பிளேக்குடன் உரையாடியுள்ள சுப்பிரமணியசுவாமி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத் தொடர்பாக இலங்கையுடன் ஒபாமா நிர்வாகம் பேச்சு நடத்தி இணக்கம் காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் தீர்மானத்தை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைச் சக்திகளின் வெற்றியாக அமைந்து விடக்கூடாது என்றும், இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறக் கூடும் என்றும் றொபேட் ஓ பிளேக்கிடம், சுப்பிரமணியசுவாமி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளுடனான தனது சந்திப்பு குறித்தும் அவர் திருப்தி வெளியிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு விசாரணையையும் இலங்கையின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அனைத்துலகக் குழுவும் அதை மேற்கொள்ளக் கூடாது என்றும் சுப்பிரமணியசுவாமி வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளுடன் தான் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில், இலங்கைக்கு உத்தரவிடும் தொனியிலோ, அனைத்துலக விசாரணையைக் கோரும் வகையிலோ ஜெனிவா தீர்மானம் இருக்காது என்றும்,  இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply